×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அதிர்ச்சி... நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் நீக்கம்... சென்னை உயர் நீதிமன்ற சுற்றறிக்கை.!

அதிர்ச்சி... நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப்படங்கள் நீக்கம்... சென்னை உயர் நீதிமன்ற சுற்றறிக்கை.!

Advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் அம்பேத்கரின் உருவப் படங்களை வைக்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் இனி மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவரின் உருவப்படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து  ஆலந்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கரின்  உருவப்படமும் அகற்றப்பட்டிருக்கிறது. இந்த சம்பவங்கள்  பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன‌.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என  அழைக்கப்படும் அம்பேத்கரின் திரு உருவப் படங்கள்  நீதிமன்றங்களில் இருந்து  அகற்றப்படுவதற்கான உத்தரவு  அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #high court order #Madras High Court #ambedkar portrait #circular
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story