#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அதிரடி.!
#Breaking: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம் அதிரடி.!
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உட்பட 9 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் குமரி கடல் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மற்றும் புதுச்சேரி - காரைக்கால் மாவட்டத்தில் வரும் 3 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.