#Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யுமா?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
#Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யுமா?.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 30ஆம் தேதியான இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். 31 ஆம் தேதி முதல் மூன்றாம் தேதி வரையில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதியில் வறண்ட வானிலே நிலவும்.
தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மூத்தத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.