#Breaking: வேகமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு முந்துகிறது - வானிலை ஆய்வு மையம்.!
#Breaking: வேகமாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்திற்கு மழை வாய்ப்பு முந்துகிறது - வானிலை ஆய்வு மையம்.!
வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் வரும் வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கான சாதகமான சூழல் நிலவுதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்த நிலையில், குறைந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 08:30 மணி நிலவரப்படி உருவாகியுள்ளது. வளிமண்டல சுழற்சி, வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியை உருவாக்கும் சூழ்நிலை உண்டாகி இருக்கிறது.
11 ம் தேதியே வருகிறது
மேற்கு-வடமேற்குத்திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணிநேரத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தமிழகத்தின் கடலோரப்பகுதிகளை விரைவில் நெருங்கலாம். 12 ம் தேதி வாக்கில் தமிழகத்தை நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 11 ம் தேதியே அவை தமிழகத்திற்கு வரும்.
இதையும் படிங்க: #Breaking: 23 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
வேகமாக வருகிறது
எதிர்பார்த்ததை விட தமிழகத்தை நோக்கி விரைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருவதால், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் வாய்ப்புகளும் ஏற்பட்டுள்ளது.
புயல் வாய்ப்பு இப்போது இல்லை
வானிலை ஆய்வு மையம் சார்பில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள் கண்காணிக்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போதைய நிலையில் புயலாக வலுப்பெறும் வாய்ப்பு இல்லை எனினும், தொடர்ந்து நகர்வுகள் கண்காணிக்கப்பட்டு அடுத்த அறிவிப்பு வெளியாகும். இதனால் இந்த வாரமும் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்.
இதையும் படிங்க: #Breaking: "உணவு, குடிநீர் வேண்டும்" போராட்டத்தில் குதித்த மக்கள்.. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் ஸ்தம்பித்துப்போன போக்குவரத்து.!