×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா?.. அதிரடி செக் வைத்த தனியார் நிறுவனங்கள்.. வேலைக்கு வர இது கட்டாயம்..!

பொங்கலுக்கு சொந்த ஊர் பயணமா?.. அதிரடி செக் வைத்த தனியார் நிறுவனங்கள்.. வேலைக்கு வர இது கட்டாயம்..!

Advertisement

சொந்த ஊருக்கு சென்று திரும்பிய பணியாளர்களிடம், அந்தந்த நிறுவனங்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கேட்டு கெடுபிடி காண்பிக்க தொடங்கியுள்ளது. பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை போன்ற வெளியூர்களில் தங்கி இருந்து பணியாற்றி வரும் பலரும், சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து இருந்தனர். தற்போது பொங்கல் பண்டிகை நிறைவு பெற்றுள்ள நிலையில், பணியிடத்திற்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். 

இரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலமாக அனைவரும் வேலையிடத்திற்கு வர தொடங்கியுள்ள நிலையில், தலைநகர் சென்னைக்கு வர அரசின் சார்பில் சிறப்பு பேருந்துகளும், இரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், சென்னை போன்ற நகரங்களில் பணியாற்றிவரும் பணியாளர்களில், ஊருக்கு சென்று வந்தோரின்/வருவோரின் விபரங்கள் நிறுவனம் சார்பில் சேகரிக்கப்பட்டு, அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது. 

இதனால் வெளியூரில் இருந்து சென்னை திரும்பியுள்ள பணியாளர்கள், தங்களது நிறுவனத்தின் அறிவுறுத்தலின் பேரில், கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து முடிவுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர். பல நிறுவனங்கள் இந்த தகவலை முன்கூட்டியே தெரிவிக்காத காரணத்தால், இன்று காலை சென்னை வந்தவர்கள், மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார்.

தமிழக அரசு கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், அதன் ஒரு அங்கமாக மேலும் வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Company #Corona negative #tamilnadu #pongal festival
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story