தனியாக செல்லும் பெண்கள் டார்கெட்.. சினிமா உதவி இயக்குனர் பரபரப்பு கைது.!
தனியாக செல்லும் பெண்கள் டார்கெட்.. சினிமா உதவி இயக்குனர் பரபரப்பு கைது.!
சாலையில் தனியாக நடந்து செல்லும் இளம் பெண்களை குறிவைத்து, நகை பறிப்பில் ஈடுபட்ட சினிமா உதவி இயக்குனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள மேற்கு மாம்பலம் சீனிவாச ஐயங்கார் முதல் தெரு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 54). இவர் கடந்த மாதம் 25 ஆம் தேதியன்று ராமகிருஷ்ணாபுரம், மூன்றாவது தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருக்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் விஜயலட்சுமியின் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக விஜயலட்சுமி அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்து வந்தனர். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளியான சென்னை கோடம்பாக்கம் ராஜாராம் திரைப்பட இயக்குனர்கள் காலனி பகுதியை சார்ந்த விஜய்பாபு வயது (37) என்ற நபரை கைது செய்துள்ளனர்.
கோடம்பாக்கம் வடபழனி பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டது விஜய் பாபு தான் என்பதும் விசாரணையில் அம்பலமானது. அவரிடம் இருந்து 13 சவரன் தங்க நகைகள், இருசக்கர வாகனம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. விஜய்பாபு தன்னை சினிமா உதவி இயக்குனர் என்று கூறிவரும் நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் வருமானம் இல்லாமல் தவித்த காரணத்தால் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் யாரிடம்? உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார், எந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்? என்ற தகவலை தெரிவிக்கவில்லை.