1 ரூபாய் ஊறுகாவுக்காக அடித்து நொறுக்கப்பட்ட மளிகைக்கடை?.. சென்னையில் பகீர் சம்பவம்.!
1 ரூபாய் ஊறுகாவுக்காக அடித்து நொறுக்கப்பட்ட மளிகைக்கடை; சென்னையில் பகீர் சம்பவம்.!
சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகைக்கடையில், சம்பவத்தன்று வந்த இளைஞர் ரூ.1 க்கு ஊறுகாய் கேட்டதாக தெரியவருகிறது. அப்போது, கடையின் உரிமையாளர், வாடிக்கையாளர் இடையே வாதம் ஏற்பட்டுள்ளது.
அச்சமயம், முதலில் கடையின் உரிமையாளர் கைநீட்டிவிட, பின் அடி வாங்கியவர் அங்கிருந்து சென்று 5 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களை அழைத்து வந்தார். பின் அங்கு வாக்குவாதம் நடந்து கடை அடித்து நொறுக்கப்பட்டது. இருதரப்பும் தங்களுக்கு இடையே கைகலப்பில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: சென்னை வான் சாகச நிகழ்ச்சியில் த.வெ.க உறுப்பினரும் பலி..!
வீடியோவின்படி, 0.09 ல் முதலில் கடையின் உரிமையாளர் இளைஞரை அடித்த நிலையில், அதன் பின்னரே அங்கு சர்ச்சை சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் அந்த சம்பவத்திற்கு முன்பு இருதரப்புக்கும் என்ன பிரச்சனை? என விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திரைப்படத்தை மிஞ்சும் நிஜம்.. கார் பார்க்கிங் விவகாரத்தில் பகீர்.. பாதிக்கப்பட்டவர் கண்ணீருடன் குமுறல்.!