குடிக்க பணம்தர மறுத்த நண்பர் குத்திக்கொலை; வாக்குவாதம் முற்றியதால் பயங்கரம்.!
குடிக்க பணம்தர மறுத்த நண்பர் குத்திக்கொலை; வாக்குவாதம் முற்றியதால் பயங்கரம்.!
சென்னையில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்குமார் (வயது 39). கோயம்பேடு மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் சதீஷ்குமார் மது அருந்தி கொண்டிருந்த நிலையில், அவருடன் சக தொழிலாளியாக பணியாற்றி வரும் நண்பர் திருவண்ணாமலை சேர்ந்த மணிகண்டன் (வயது 29) என்பவரும் இருந்துள்ளார்.
அவர் சதீஷ்குமாரிடம் மதுபானம் குடிக்க பணம் கேட்டு இருக்கிறார். சதீஷ்குமார் பணம் தர மறுப்பு தெரிவிக்கவே, நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த வாக்குவாதத்தில் இருவரும் சரமாரியாக தாக்கிக் கொண்ட நிலையில், மணிகண்டன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரை குத்தி கொலை செய்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் மயங்கிய சதீஷ்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மணிகண்டனை கைது செய்தனர்.