என் மகனை போட்டவன் உயிரோட இருக்கலாமா?.. பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம்..! சிதறியோடிய பொதுமக்கள்.!
என் மகனை போட்டவன் உயிரோட இருக்கலாமா?.. பட்டப்பகலில் நடந்த பரபரப்பு சம்பவம்..! சிதறியோடிய பொதுமக்கள்.!
மகனை கொலை செய்த கும்பலை பழிவாங்க தந்தை, சகோதரர்கள் பட்டப்பகலில் நடத்திய கொலைவெறித்தாக்குதல் தொடர்பான சம்பவம் கொரட்டூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள கொரட்டூர், கங்கையம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் அரவிந்தன் (வயது 24). இவர் கடந்த 2018 ஆம் வருடம் ஜூலை மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த விசாரணைக்கு பின்னர், திருமுல்லைவாயல் பகுதியை சார்ந்த ஆகாஷ் (வயது 25), கொரட்டூரை சார்ந்த பிரசாந்த் (வயது 27), பிரசாந்தின் தம்பி மணி (வயது 25) உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை பூந்தமல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் கொலையாளிகளாக இருக்கும் பிரசாந்த், ஆகாஷ், மணி ஆகிய 3 பெரும் ஜாமீன் பெற்று வெளியே வந்த நிலையில், மூவரும் வழக்கு தொடர்பாக நேற்று முன்தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகி பாடிக்கு வந்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த அரவிந்தனின் தந்தை ரவி (வயது 65), சகோதரர்கள் அப்பன் ராஜ் (வயது 32), விவேக் (வயது 30) ஆகிய 3 பேரும் அரவிந்தின் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க பிரசாந்த் உட்பட 3 பேரையும் அரிவாளால் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். 3 பேரும் தப்பி செல்ல முயற்சித்தபோதிலும், நடுரோட்டில் துரத்தி சென்று சரமாரியாக அரிவாளால் வெட்டி இருக்கின்றனர். பின்னர், அரவிந்தனின் தந்தை தரப்பு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கொரட்டூர் கவலை துறையினர், படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பு புகாரின் பேரில் கொரட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அரவிந்தனின் கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு ரவி, அப்பன்ராஜ், விவேக் ஆகிய 3 பேரும் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியான நிலையில், இவர்கள் 3 பேரும் நேற்று காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும், பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த கொலை சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது. இதுகுறித்த சி.சி.டி.வி காமிரா விடியோக்கள் வெளியாகியுள்ளது.