சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி..!
சென்னையில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு... இல்லத்தரசிகளுக்கு பேரதிர்ச்சி..!
சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. பிற மாநிலத்தில் பெய்யும் மழை, வெள்ள பாதிப்பு காரணமாக காய்கறிகளின் வரத்துகளில் திடீர் பாதிப்பு ஏற்படும்.
இதனால் காய்கறிகளின் விலையும் அதிகரிக்கும். தக்காளி விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் தக்காளி வியாபாரிகள் சங்க தலைவர் எம். தியாகராஜன் தெரிவிக்கையில்,
கோயம்பேடுக்கு தினமும் 65 லாரிகள் தக்காளிகள் வருகிறது. தொடர் மழையின் காரணமாக தக்காளி வரத்து பாதிக்கப்பட்டு, 40 லாரிகள் மட்டுமே தக்காளி வருகிறது. இதனால் ரூ.20 முதல் ரூ.25 க்கு விற்பனையான தக்காளி ரூ.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் அண்டை மாநிலத்தில் மழை பெய்தால் விலை அதிகரிக்கும்" என்று தெரிவித்தார்.