சென்னையில் லெஸ்பியன் ஜோடி காதல் திருமணம்?.. வைரலாகும் புகைப்படம்..!
ஓரினசேர்க்கை பெண் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட புகைப்படம் பெரும் வைரலாகியுள்ளது.
ஓரினசேர்க்கை பெண் காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதாக கூறப்பட்ட புகைப்படம் பெரும் வைரலாகியுள்ளது.
ஓரினசேர்கையாளர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்ததை தொடர்ந்து, இந்தியாவில் தன்பாலின திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. ஆண் - பெண் திருமணங்கள் என்பது பெருமளவில் நடந்து வந்தாலும், தனக்கு பிடித்த பெண்ணை பெண் திருமணம் செய்வதும், ஆணை ஆண் திருமணம் செய்வதும் நடக்கிறது.
வெளிநாடுகளில் எல்.ஜி.பி.டி என்று அழைக்கப்படும் சமூகம் திருநங்கை மற்றும் தன்பாலின ஈர்ப்பு ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த அமைப்பு சில நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டவை, சில நாட்டில் இந்த சமூகத்திற்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாத நாடுகளில் எல்.ஜி.பி.டி ஆதரவாளர்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையை சேர்ந்த இரண்டு பெண் தன்பாலின ஈர்ப்பு காதல் ஜோடி திருமணம் செய்துகொண்டதாக கூறி புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த காதல் ஜோடியின் திருமணத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் என இருவேறு கருத்துக்களும் கிடைக்க பெறுகின்றன. ஏற்கனவே தன்பாலின பெண் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்தது தமிழகத்தில் ஆங்காங்கே சொற்ப அளவில் நடந்து வந்தது.
இவற்றில், இந்த ஜோடியின் புகைப்படம் மற்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை யார்? எதற்காக வெளியிட்டார்கள்? என்று தெரியவில்லை. ஓரின சேர்க்கையாளர்களை பொறுத்த வரையில், இது அவர்களுக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் முயற்சி என்று கூறப்படுகிறது. சில நல்ல உள்ள கொண்டவர்கள், அவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிப்போம் என வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர். ஆனால், இது உண்மையில் லெஸ்பியன் ஜோடிகளின் திருமணமா? அல்லது விஷம நபர்களின் வன்ம செயலா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
ஓரினசேர்க்கை காதல் ஏன்?.
காதல் என்பது யாருக்கு, எப்போது ஏற்படும் என்பதை கூற இயலாது. தன்னுடன் பழகும் தோழி அல்லது தோழன் தன் மீது வைத்துள்ள அதிக பாசம், எதோ ஒரு சூழ்நிலையில் காதலாக மாறி இருவரும் காதல் வயப்படுகின்றனர். இதனால் அவள்/அவன் தன்பாலினமாக இருந்தாலும், இருவரும் ஒன்றாக வாழ விரும்புகின்றனர். மேலும், இருவரும் தோழமையுடன் பழகியுள்ளதால், ஒருவருக்கொருவர் நல்ல புரிதலை ஒவ்வொரு விஷயத்திலும் கொண்டுள்ளனர். தவறுகள் செய்யும் பட்சத்தில் தயங்காமல் தட்டிக்கேட்கின்றனர். இதனால் அந்த பந்தத்தை இருவரும் நீடிக்க விரும்புகின்றனர்.
முந்தைய காலங்களில் அவ்வாறான காதல் நடந்து இருந்தாலும், அவை கைகூடாமல் போயிருக்கலாம். ஆனால், இன்றளவில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக ஓரினசேர்கையாளர்கள் திருமணம் சாதாரணமாக நடைபெற தொடங்கியுள்ளது. பெரும்பாலும் இவர்களுக்கு பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கவில்லை என்றாலும், அவர்கள் இருவரும் நல்ல வேலையில் இருந்தால் குடும்பத்தை கவனிக்க வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் தங்களின் பாதையை தேர்வு செய்துகொள்கின்றனர்.
ஓரின காதல் திருமணம் - குழந்தை எப்படி?.
இன்றுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் திருமண பந்தத்தில் இணைந்த ஆண் துணைக்கோ அல்லது பெண் துணைக்கோ குழந்தையை பெற்றுக்கொள்ள உடல்நலம் எதுவாக இல்லாத பட்சத்தில் வாடகை தாய், விந்தணு தானம், விந்தை உட்செலுத்தி குழந்தைப்பேறு செய்வது என்று பல்வேறு முறைகளில் குழந்தைகளை பெற்றுக்கொள்கிறார்கள். அதற்கு விருப்பம் இல்லாதவர்கள் அனாதை இல்லங்களில் குழந்தைகளை சட்டப்படி வாங்கி வளர்த்து வருகின்றனர். மேலும், லெஸ்பியன் ஜோடிகளின் ஒருவருக்கு விந்தணு தானம் மூலமாக பெறப்பட்ட விந்தை செலுத்தி கருவுறுதல் போன்ற மருத்துவ முறைகள் வந்துவிட்டன. அதனை வைத்து குழந்தைகளை பெறலாம். விருப்பம் இல்லாதவர்கள் அவர்களின் வாழ்க்கையை விருப்பப்படி வாழலாம்.
ஆண் - பெண் திருமணமோ, ஓரினசேர்க்கை திருமணமோ, தங்களை நம்பி வந்துள்ள துணையை மற்றொரு துணை வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை மனசாட்சிக்கு துரோகம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுவே நன்மையை தரும். ஆதரவும், எதிர்ப்பும் அவரவர் விருப்பம். தனிநபரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றாலும், அது இயற்கையின் நியதிக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தின் சமநிலை அடிக்கோடு ஆகும். இயற்கைக்கு எதிரான ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டும். அவை எதிர்காலத்தில் நடக்கும்.