சென்னை விமான நிலையத்தில் CISF அதிகாரி தற்கொலை விவகாரம்.. காதல் தோல்வியால் பரிதாபம்.! அதிர்ச்சி திருப்பம்.!!
சென்னை விமான நிலையத்தில் CISF அதிகாரி தற்கொலை விவகாரம்.. காதல் தோல்வியால் பரிதாபம்.! அதிர்ச்சி திருப்பம்.!!
தான் காதலித்து வந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறவிருந்ததால், மனமுடைந்த சி.ஐ.எஸ்.எப் அதிகாரி விமான நிலையத்தில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த மத்திய தொழிற்படை அதிகாரி யஷ்பால் (வயது 26). இவர் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாகூர் மாவட்டம், சத்துலவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2017 ஆம் வருடம் மத்திய தொழிற்படையில் இணைந்த யஷ்பாலுக்கு, சென்னை விமான நிலையத்தில் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் சென்னை பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு, 19 ஆவது நுழைவு பகுதியில் உள்ள விமான நிலைய கழிவறைக்குள் சென்ற யஷ்பால், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ந்துபோன தூய்மை பணியாளர்கள், கழிவறைக்குள் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, யஷ்பால் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்தய தொழிற்படை அதிகாரிகள், விமான நிலைய காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விமான நிலைய காவல் உதவி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள், யஷ்பாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில், யஷ்பால் கடந்த மாதத்தில் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பின்னர், கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக சென்னைக்கு வந்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக 2 நாட்கள் சுய தனிமையில் இருந்த யஷ்பால், நேற்று காலையில் பணிக்கு வந்துள்ளார். அப்போதுதான் தற்கொலை நடந்துள்ளது.
யஷ்பால் தனது சொந்த ஊரில் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவருக்கு இன்று (மார்ச் 4) திருமணம் என்றும் கூறப்படுகிறது. காதலிக்கு திருமணம் என்ற தகவலால் மனமுடைந்து காணப்பட்ட யஷ்பால், அதே சோகத்தில் சென்னை வந்துள்ளார். பின்னர், பணிக்கு சென்றவர் எதிரிகளிடம் இருந்து உயிரை பாதுகாக்க கொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்" என்பது தெரியவந்தது.