முன்விரோதத்தில் உணவு டெலிவரி ஊழியர் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.! பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!!
முன்விரோதத்தில் உணவு டெலிவரி ஊழியர் வீட்டு வாசலில் வெட்டிக்கொலை.! பதற்றத்தால் காவல்துறை குவிப்பு.!!
உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஊழியர், முன்விரோத தகராறில் வீட்டு முன்பு வைத்து படுகொலை செய்யப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரை, காமராஜ் சாலையில் உள்ள நடுக்குப்பம் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் அஜித்குமார் (வயது 24). பட்டதாரியான இவர், உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று வழக்கம்போல பணிக்கு சென்ற அஜித் குமார், இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளார்.
இந்நிலையில், வீட்டு வாசலில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்கு செல்ல முயற்சித்த போது, அங்கு வந்த 5 பேர் கும்பல் அஜித் குமாரை சுற்றிவளைத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. மேலும், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதத்தால் தாக்கி இருக்கிறது. இதனால் அவரின் தலை உள்ளிட்ட உடல் பாகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார்.
அஜித் குமாரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மெரினா காவல் துறையினர், அஜித் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அஜித் குமாருக்கும் - அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது உறுதியானது. இந்த முன் விரோதத்தில் திட்டமிட்டு அஜித்தை கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால், பாதுகாப்பு கருதி நடுக்குப்பம் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.