தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 17ஆம் தேதியான இன்று, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18-ஆம் தேதி மற்றும் 19-ம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யப்படும் என்றும் கணித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெளியானது 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.