×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ்!.. மீண்டும் சென்னை முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்..!!

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பாஸ்!.. மீண்டும் சென்னை முழுவதும் இலவசமாக பயணிக்கலாம்..!!

Advertisement

21-ஆம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 

சென்னையில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பேருந்து பயண டோக்கன்கள் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழக வேளாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னையில் வாழும் மூத்த குடிமக்கள் மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், பயண டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, வரும் அரையாண்டில் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்பட உள்ளது. 

40 மையங்களில் வரும் 21-ஆம் தேதி முதல் 31 ஜனவரி 31-ஆம் தேதி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் விதம் 6 மாதங்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்தல் புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை நடைமுறைப்படுத்தப்படும். பின்னர், பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் பயண டோக்கன் வழங்கப்படும். 

கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் ஜெராக்ஸ் காப்பியுடன், வயது சான்றாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் மற்றும் இரண்டு  பாஸ்போர்ட் அளவிலான கலர் ஃபோட்டோகளை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும் சமர்பித்த ஆவணங்களை சரிபார்த்திட அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வருபவர்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒன்று மட்டும் கொண்டு வந்தால் போதுமானது. என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Chennai Metropolitan #Transport Corporation #free ticket
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story