சொந்த வீட்டை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட் முதலீடு.. ரூ.25 இலட்சத்தை இழந்தவர் தீக்குளித்து தற்கொலை.!
சொந்த வீட்டை அடமானம் வைத்து ஷேர் மார்க்கெட் முதலீடு.. ரூ.25 இலட்சத்தை இழந்தவர் தீக்குளித்து தற்கொலை.!
சென்னையில் உள்ள முகப்பேர், மேற்கு இரண்டாவது சாலையை சேர்ந்தவர் கவின் கார்த்திக் (வயது 34). இவர் பட்டதாரி வாலிபர் ஆவார். கவின் கார்த்திக் ஆன்லைன் ஷேர் மார்க்கெட்டில் பணமுதலீடு செய்து வந்துள்ளார்.
இந்த முதலீட்டுக்கு தந்தையின் பெயரில் உள்ள வீட்டை அடமானம் வைத்து பணம் திரட்டிய நிலையில், ரூ.25 இலட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த கவின் கார்த்திக் மன வருத்தத்தில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது வீட்டின் மொட்டைமாடியில் இருந்த நவீன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் படுகாயமடைந்த கவின் கார்த்திக் மீட்கப்பட்டு அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவர்கள் கவினுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள நொளம்பூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.