மசாஜ் செய்வதாக நடித்து சிறுமியிடம் சில்மிஷம்... அழகு நிலைய பணியாளர் கைது.!
மசாஜ் செய்வதாக நடித்து சிறுமியிடம் சில்மிஷம்... அழகு நிலைய பணியாளர் கைது.!
சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் பகுதியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி இருக்கிறார். இவர் மணப்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு, தலையில் எண்ணெய் மசாஜ் செய்ய சென்ற நிலையில், மாணவிக்கு எண்ணெய் மசாஜ் செய்த மணிகண்டன் (வயது 25) என்ற பணியாளர், திடீரென அவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
இதனால் பேரதிர்ச்சியடைந்த சிறுமி தனது தாயிடம் தகவலை தெரிவிக்கவே, அவர் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.