×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்; பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்.!

#JustIN: கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்; பாஜக தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம்.!

Advertisement

போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குச் சென்றுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள், சுவாமி சிலையின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த முரளி என்பவர், மதுபோதையில் கடவுள் தான் வேண்டியதை தரவில்லை என்ற விரக்தியில், இன்று காலை பெட்ரோல் குண்டை வீசி சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, முரளிக்கு வலைவீசப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கணடனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "சென்னையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இதன் தொடர்ச்சியாக இன்று கோவிலுக்குள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. 

சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு, ஶ்ரீ வீரபத்ர சுவாமி கோவில் கருவறைக்குள்ளே, சுவாமி சிலையின் மீதே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்குப் போய்விட்டது. 

போலி மதச்சார்பின்மையும், அரைகுறை நாத்திகமும் பேசித் திரியும் பிரிவினைவாத அமைப்புக்களை கட்டுப்படுத்த, திமுக தவறியதன் விளைவு, இன்று கோவிலுக்குள்ளேயே பெட்ரோல் குண்டு வீசும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. தீவிரவாதத் தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று மடைமாற்ற முயற்சித்த கையாலாகா திமுக அரசே இதற்கு முழு பொறுப்பு" என தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #bjp #dmk #chennai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story