தாய் - தந்தை சண்டையில் நேர்ந்த பயங்கரத்தால், அனாதையாக கதறும் பச்சிளம் பிஞ்சு.. மனதை பதறவைக்கும் சோகம்.!
பெற்றோர்கள் சண்டையில் தந்தை தாயை கொலை செய்திட, பச்சிளம் குழந்தையோ அனாதையாக தவிக்கும் துயரம் நடந்துள்ளது.
பெற்றோர்கள் சண்டையில் தந்தை தாயை கொலை செய்திட, பச்சிளம் குழந்தையோ அனாதையாக தவிக்கும் துயரம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள புரசைவாக்கம் வெள்ளாளர் தெரு பகுதியை சார்ந்தவர் வினோத் குமார் (வயது 33). இவரது மனைவி ஹேமாவதி (வயது 24). இந்த தம்பதிகளுக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறார். கொளத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் விளம்பர நிறுவனத்தில், புகைப்பட கலைஞராக வினோத் குமார் பணியாற்றி வந்துள்ளார்.
வினோத் - ஹேமாவதி தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்த நிலையில், ஒருகட்டத்தில் பிரிந்து வாழ்ந்துள்ளனர். பின்னர், விவாகரத்துக்கு விண்ணப்பித்து ஹேமாவதி தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, உறவினர்கள் இருதரப்பும் பேசி தம்பதிகளை சேர்த்து வைத்துள்ளனர். விவாகரத்து விண்ணப்பமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மழைநீரில் ஹேமாவதி வழுக்கி விழுந்து காயமடைந்துவிட்டதாக கூறி, வினோத்குமார் மனைவியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால், மருத்துவர்கள் ஹேமாவதி இறந்துவிட்டதாக தெரிவித்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இப்படியான சூழ்நிலையில், ஹேமாவதியின் தந்தை வினோத்குமார் மகள் ஹேமாவதியை கொலை செய்துவிட்டதாக கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், பிரேத பரிசோதனையில் ஹேமாவதி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து, விசாரணையில் ஹேமாவதியின் கழுத்தை நெரித்து கொலை செய்த வினோத்குமார், மனைவி மழை நீரில் வழுக்கி விழுந்து நாடகமாடியதாக தெரிவித்துள்ளது உறுதியானது. குற்றத்தையும் வினோத் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து வினோத் குமார் அளித்த வாக்குமூலத்தில், "மனைவி ஹேமாவதி தன்னை உறவுக்கார பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவமானப்படுத்தி பேசினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார்" என்று கூறியுள்ளார். வினோத் குமாரை கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கணவன் - மனைவி சண்டையில் மனைவியை கணவன் கொலை செய்திட, 5 வயது பெண் குழந்தையோ நிர்கதியாய் நின்றது அங்கிருப்போரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.