சென்னை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா!
Chennai rajeevkanth hospital doctors affected by corona

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா வைரஸால் உலகின் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் உள்ளது. இந்தக் கொடூர வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவலின் எண்ணிக்கையும், கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தமிழகத்தில் சென்னையில் தான் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த பணிபுரிந்து வரும் மருத்துவர்கள்,காவலர்கள் ,பத்திரிகையாளர்களிடம் பரவி வருகிறது. அந்த வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 6 மருத்துவர்களுடன் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பாக இருப்பவர்களிடமே கொரோனா பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் சமூக விலகலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே கொரோனாவை ஒழிப்பதற்கு அரசு அளித்த விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்து கொரோனாவை விரட்டுவோம்.