சுண்டலில் இருந்த பல்லி... ஆசையாக வாங்கி சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதி.. சென்னையில் பகீர்.!
சுண்டலில் இருந்த பல்லி... ஆசையாக வாங்கி சாப்பிட்ட தாய், மகள் மருத்துவமனையில் அனுமதி.. சென்னையில் பகீர்.!
பல்லி விழுந்த சுண்டலை தாய் மற்றும் இரண்டு மகள்கள் சாப்பிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள எர்ணாவூர் பாரதியார் நகரில் வசித்து வருபவர் ஆரோக்கியராஜ். இவர் தனது மனைவி வேளாங்கண்ணி மற்றும் மகள்களான டெய்சி, மரியா, நான்சி ஆகியோருடன் வெளியில் சென்றுள்ளார்.
இந்த நிலையில்,குடும்பத்துடன் ராயபுரம் எம்சி சாலையில் உள்ள ஒரு தேனீர் கடைகள் சுண்டல் சாப்பிட்டுள்ளனர். அப்போது நான்சி மற்றும் மரியா சாப்பிட்ட சுண்டல் கிண்ணத்தில் இறந்து போன பல்லி ஒன்று கிடந்ததால், உடனடியாக தனது பெற்றோரிடம் காண்பித்துள்ளனர்.
இதனால் அவர்கள் 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் சுண்டலில் எப்படி பல்லி வந்தது? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.