17 மாவட்டங்களில் இடிமின்னலுடன் வெளுத்தெடுக்க போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
17 மாவட்டங்களில் இடிமின்னலுடன் வெளுத்தெடுக்க போகும் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தென்னிந்திய பகுதியில் மேல்நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் மேற்குதிசை காற்று காரணமாக 25-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மழை மற்றும் பலத்தகாற்றுடன் கூடிய லேசானமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, "கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,
திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், தென்காசி, உட்பட 17 மாவட்டங்களில் மார்ச் 25-ஆம் தேதியான இன்று இடிமின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.