23ம் தேதி வரை தமிழகத்தில் இடி-மின்னலோடு வெளுக்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
23ம் தேதி வரை தமிழகத்தில் இடி-மின்னலோடு வெளுக்கப்போகும் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம்.!
அடுத்த 4 நாட்களுக்கான வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் என்ற வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.
தென்னிந்திய பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் கீழ் அடுக்கு திசைக்காற்றும், மேற்கு திசை காற்று காரணமாக 20-ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
21ம் தேதியை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதியை பொறுத்தவரையில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தலைநகர் சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 32 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியசும் பதிவாகலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.