12 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
12 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "27ம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒருசில இடஙக்ளில் இடி-மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
28ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மேகமூட்டம் காணப்படலாம். நகரின் சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.
மீனவர்களுக்காக எச்சரிக்கையாக குமரிக்கடல், மன்னர் வளைகுடா, கேரளா, தென் கர்நாடக கடலோர பகுதி, அரபிக்கடல், இலட்சத்தீவு பகுதியில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.