இரவு 7 மணிவரை வெளுத்துக்கட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
இரவு 7 மணிவரை வெளுத்துக்கட்டப்போகும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
மேற்குதிசைக்காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 15 மாவட்டங்களில், இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: மழை நீரில் காணாமல் போன பள்ளம்; கைக்குழந்தைகளுடன் கால் இடறி விழுந்த 3 பெண்கள்.!
15 மாவட்டங்களில் மழை
அதன்படி, விழுப்புரம், கோயம்புத்தூர், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தென்காசி, மயிலாடுதுறை, திருநெல்வேலியை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதையும் படிங்க: 14 வயது சிறுமியை சீரழித்து, நிறைமாத கர்ப்பிணியாக்கிய அத்தை மகன்; வீட்டிற்கு வந்துசென்றபோது துணிகரம்.!