கரையை கடந்தும் வேலையை காட்டிய பெஞ்சல் புயல்.. அடித்து நொறுக்கும் மழை.!
கரையை கடந்தும் வேலையை காட்டிய பெஞ்சல் புயல்.. அடித்து நொறுக்கும் மழை.!
வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெஞ்சல் புயலாக மாமல்லபுரம் - காரைக்கால் இடையே தரையை கடந்தது. புயலின் முன் பகுதி புதுச்சேரியை மையமாகக் கொண்டு, புதுச்சேரிக்கு அருகில் கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நேற்று மாலை சுமார் 05:30 மணிக்கு மேல் புயலின் முன் மழை மேகங்கள் கொண்ட பகுதி கரையை கடக்கத் தொடங்கிய நிலையில், இரவு சுமார் 10 மணிக்கு மேல் புயலின் நடுப்பகுதி புதுச்சேரியை கடந்தது.
இதனிடையே புயல் தொடர்ந்து புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலேயே மையம் கொண்டுள்ள நிலையில், அது மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #JustIN: அடுத்த 3 மணிநேரத்திற்கு மக்களே உஷார்.. ரெட் அலர்ட் எச்சரிக்கை.!
புயல் கரையை கடந்து விட்ட போதிலும், அதன் மழை மேகங்கள் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சூழ்ந்துள்ள காரணத்தால், அம்மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழையானது தொடர்ந்து சாரல் மழையாகவும், மிதமான மழையாகவும் காற்றுடன் கொண்ட பலத்த மழையாகவும் பெய்து வருகிறது.
இதையும் படிங்க: #Breaking: கரையை கடக்கத் தொடங்கியது ஃபெஞ்சல் புயல்.. வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!