16 வயது திருநங்கை இன்ஸ்டா காதல் தோல்வியால் தற்கொலை.. உண்மையை மறைத்து பறிபோன உயிர்.!
16 வயது திருநங்கை இன்ஸ்டா காதல் தோல்வியால் தற்கொலை.. உண்மையை மறைத்து பறிபோன உயிர்.!
இன்ஸ்டாகிராமில் பெண் என நினைத்து திருநங்கையை காதலித்தது வந்த இளைஞர், உண்மை தெரிந்து கைவிட்டதால் ஏமாற்றமடைந்த திருநங்கை தற்கொலை செய்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.
சென்னையில் உள்ள காசிமேடு பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு பயின்று வரும் மாணவன், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னதாக திருநங்கையாக மாறி இருக்கிறார். இதனால் குடும்பத்தை விட்டு பிரிந்த 16 வயது திருநங்கை, ராயபுரம் மீனாட்சி அம்மன் பேட்டை பகுதியில் திருநங்கை ஆண்ட்ரியா என்பவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சம்பவத்தன்று திருநங்கை ஆண்ட்ரியா வீட்டில் இல்லாத நேரத்தில், மின்விசிறியில் 16 வயது திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 16 வயது திருநங்கையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையில், இன்ஸ்டா காதல் சம்பவம் நடந்தது அம்பலமானது. 16 வயது திருநங்கையின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பகுதியை சார்ந்த மஞ்சுநாத் என்பவர், திருநங்கையை பெண் என நினைத்து 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
திருநங்கையும் தனது பாலினம் குறித்து கூறாமல் பேசி வந்த நிலையில், 2 வருடமாக இன்ஸ்டாவில் காதலிக்கிறோம், நேரில் பார்க்கலாம் என்று மஞ்சுநாத் கூறி வலியுறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் மஞ்சுநாத்தின் தீவிரத்தை புரிந்துகொண்ட 16 வயது திருநங்கை, தான் பெண் இல்லை என்றும், நான் திருநங்கை என்றும் உண்மையை கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்துபோன மஞ்சுநாத், நம்மை நமது வீட்டில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று கூறி காதலை துண்டித்து, இன்ஸ்டா கணக்கையும் நீக்கி தலைமறைவாகியுள்ளார். காதலன் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்று மனஉளைச்சலில் இருந்து வந்த 16 வயது திருநங்கை இறுதியில் தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
முதலிலேயே தன்னைப்பற்றி திருநங்கை கூறியிருந்தால் ஒருவேளை அன்றே காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும் அல்லது முறிந்துபோயிருக்கும். இப்படி பரிதாபமாக உயிர் போயிருக்காது என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது.