அரசு நிலம் பிளாட் போட்டு விற்பனை... 5 பேர் கும்பல் கைது.! பரபரப்பு தகவல்.!
அரசு நிலம் பிளாட் போட்டு விற்பனை... 5 பேர் கும்பல் கைது.! பரபரப்பு தகவல்.!
அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்த 5 பேர் கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைசாலை, ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் குடியிருப்புகளை அகற்ற கூடாது என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெத்தேல் நகரில் அரசு நிலத்தை 30 பேர் ஆக்கிரமிப்பு செய்து, சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக கூறி, சம்பந்தப்பட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோழிங்கநல்லூர் தாசில்தார் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த இராஜேந்திரன் (வயது 56), கன்னியப்பன் (வயது 56), சோழன் (வயது 47), வெங்கடேசன் (வயது 60), ஹரிதாஸ் (வயது 57) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.