சென்னை வாகன ஓட்டிகளே உஷார்; இன்று முதல் மறந்தும் வேகமா போயிடாதீங்க..!
சென்னை வாகன ஓட்டிகளே உஷார்; இன்று முதல் மறந்தும் வேகமா போயிடாதீங்க..!
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகள் தொடர்பான பட்டியலில், தமிழகம் முதலிடம் பிடித்தது. இதனால் தலைநகர் சென்னையில் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சென்னையில் உள்ள பெரும்பாலான சிக்னல்களில் கேமிராக்கள் பொருத்தப்பட்டு வேகக்கட்டுப்பாடு கண்காணிக்கப்படும் வசதிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், நவம்பர் மாதம் 4ம் தேதி முதலாக வாகனங்களின் புதிய வேகக்கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, ஆட்டோக்கள் காலை 7 மணிமுதல் இரவு 10 மணிவரை 40 கி.மீ வேகத்தில் செல்லலாம்.
இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ வேகம் வரையிலும், இலகுரக வாகனங்கள் 60 கி.மீ வேகம் வரையிலும், குடியிருப்பு பகுதியில் 30 கி.மீ வேகம் வரை செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே பெரும் சிரமத்தினை ஏற்படுத்தும் என ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில், வாகனங்களின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது மேலும் கிராமத்திற்கே வழிவகை செய்யும் என வாகன ஓட்டிகள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.