ஸ்விகி உடையில் ஐ.டி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை.. பீகார் இளைஞர் தாம்பரத்தில் அதிரடி கைது.!
ஸ்விகி உடையில் ஐ.டி ஊழியர்களுக்கு கஞ்சா சப்ளை.. பீகார் இளைஞர் தாம்பரத்தில் அதிரடி கைது.!
பழைய மகாபலிபுரம் சாலையில் ஸ்விகி ஊழியர் போல கஞ்சா கடத்தி ஐ.டி ஊழியர்களுக்கு சப்ளை செய்து வந்த வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளில், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், அதனை தடுக்க தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவியின் உத்தரவின் பேரில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை காவல்துறையினர் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், ஸ்விகி ஊழியர் போல டீ-சர்ட் அணிந்து வந்தவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் செயல்பட்டுள்ளார். மேலும், உணவு பொருளை டெலிவரி செய்வது போல, பொட்டலத்தை அங்கிருந்த இளைஞர்களிடம் விற்பனை செய்து பணம் பெற்றுள்ளார்.
காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை செய்தபோது, அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் குமார் சேனாதிபதி என்பதும், ஸ்விகி உணவுப் பையில் கஞ்சாவை மறைத்து ஐ.டி ஊழியர்களுக்கு சப்ளை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. பிரகாஷ் சேனாதிபதி கைது செய்த காவல்துறையினர், அவரது பையில் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். மேலும், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.