சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் சோகம்.. சடன் பிரேக் அடித்ததில் அரசு பேருந்து - வேன் மோதி விபத்து.. 15 பேர் காயம்.!
சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளால் சோகம்.. சடன் பிரேக் அடித்ததில் அரசு பேருந்து - வேன் மோதி விபத்து.. 15 பேர் காயம்.!
சென்னையில் உள்ள திருவேற்காடு, நூம்பல் பகுதியில் தனியார் ஷூ தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வரும் 15 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தனர்.
அப்போது, சாலையின் நடுவே திடீரென மாடுகள் கடந்து சென்ற நிலையில், முன்னால் சென்ற கார் பிரேக் போட்டதால், ஆற்காடு நோக்கி சென்ற அரசு பேருந்தும் நின்றுள்ளது.
இந்த வாகனத்திற்கு பின்னால் வந்த வேன் ஓட்டுநர் வாகனத்தை விரைந்து நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. இதனால் அரசு பேருந்தின் பின்புறத்தில் வேன் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில், வேன் ஓட்டுனர் உட்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில், வேனில் இருந்த 12 பேர் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக போரூர் மற்றும் பூந்தமல்லி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர்.
விபத்து நடந்த பகுதியில் மின்விளக்கு இல்லாத நிலையில், இரவு நேரத்தில் மாடுகள் கடந்து செல்வதால் விபத்து ஏற்பட்டதாகவும் மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.