டியூசன் ஆசிரியை தற்கொலை வழக்கில் பேரதிச்சி திருப்பம்.. 5 பெண்களை ஏமாற்றிய காமுகனால் நடந்த பயங்கரம்.!
டியூசன் ஆசிரியை தற்கொலை வழக்கில் பேரதிச்சி திருப்பம்.. 5 பெண்களை ஏமாற்றிய காமுகனால் நடந்த பயங்கரம்.!
5 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை காதல் வலையில் விழவைத்து கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்து காமுகன் கைவிட்ட நிலையில், 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட விசாரணையில் திருப்பம் ஏற்பட்டு கயவன் கைதாகியிருக்கிறான். காதலன் என நம்பி திருமணத்திற்கு முன்பு ஊடல் கூடல் கொண்டால் ஏற்படும் விளைவு குறித்து கண்ணீருடன் விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையில் உள்ள வளசரவாக்கம், பழனி நகரில் வசித்து வருபவர் ஹரிதா ராஜேஸ்வரி (வயது 25). இவர் கல்லூரியில் பட்டம் பயின்றுவிட்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் பயிற்சி நிறுவனத்தில் படித்து வந்துள்ளார். வீட்டில் இருந்தவாறு மாணவ - மாணவிகளுக்கு டியூசனும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 31 ஆம் தேதி ஹரிதா வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஹரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். ஹரிதாவின் செல்போன் சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவரின் கடிதமும் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்குள்ளாக்கப்பட்டது.
விசாரணையில், ஹரிதா 2 ஆண்டுகளாக அரும்பாக்கத்தில் வசித்து வரும் மதுமோகன் (வயது 35) என்பவனை காதலித்து வந்தது தெரியவந்தது. அவன் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஹரிதாவுடன் தனிமையில் பலமுறை இருந்துள்ளான். இதனால் அவர் கருவுற்றுள்ளார்.
தான் கருவுற்ற செய்தியை காதலனிடம் இன்பமாக தெரிவிக்கவே, அவன் கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய மாத்திரை வாங்கி கொடுத்துள்ளான். ஒருகட்டத்தில் அவன் தலைமறைவாகவே, மனமுடைந்த ஹரிதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, மதனின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நேற்று கைது சேது விசாரணை நடத்தினர். விசாரணையில், அரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியில் வசித்து வரும் மதுமோகன் (வயது 35) டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
தொழில் விஷயத்திற்காக வெளிநாடு சென்று வரும் மதுமோகன், விதவிதமான புகைப்படத்தை எடுத்து வைத்து பெண்களுக்கு அனுப்பி காதல் வலையில் வீழ்த்தி இருக்கிறான். இவ்வாறாக மதுமோகனின் வலையில் 5-க்கும் மேற்பட்ட பெண்களில் விழுந்துள்ளதும் தெரியவந்துள்ளது.