தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டவர் வாந்தி, மயக்கம், நெஞ்சு வலியால் மரணம்.. சென்னையில் பகீர்.!

கடையில் சிக்கன் வாங்கி சாப்பிட்டவர் வாந்தி, மயக்கம், நெஞ்சு வலியால் மரணம்.. சென்னையில் பகீர்.!

Chennai Vyasarpadi Man Died After Eating Chicken from Hotel Advertisement

சென்னையில் உள்ள வியாசர்பாடி, ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 22). இவர் நேற்றுமுன்தினம் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் பெரவள்ளூரில் செயல்பட்டு வரும் உணவகத்தில் சிக்கன் ஆர்டர் செய்து சாப்பிட்டு இருக்கிறார். பின்னர், வீட்டிற்கு வந்தவர் சூடான நீரை குடித்துள்ளார். 

இந்நிலையில், சிறிது நேரத்திற்குள் ரஞ்சித் வாந்தி எடுத்து மயங்கிவிடவே, நெஞ்சு வழிப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார். பதறிப்போன குடும்பத்தினர்  சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதி செய்துள்ளனர். ஆனால், மருத்துவர்கள் ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். 

chennai

இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல் துறையினர், ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உணவகத்தில் வாங்கிய சிக்கன் சாப்பிட்ட பின்னரே வாந்தி, மயக்கம், நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தாலும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரஞ்சித்தின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Vyasarpadi #death #chicken #hotel #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story