சென்னை: ஆக்ஸலை முறுக்கிய சிறுமி தலை நசுங்கி பலி.. இருசக்கர வாகனத்தில் தாத்தாவுடன் வந்த பேத்திக்கு நேர்ந்த சோகம்.!
சென்னை: ஆக்ஸலை முறுக்கிய சிறுமி தலை நசுங்கி பலி.. இருசக்கர வாகனத்தில் தாத்தாவுடன் வந்த பேத்திக்கு நேர்ந்த சோகம்.!

சென்னையில் உள்ள அம்பத்தூர், துரைசாமிரெட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருக்கு நிஹாரிகா என்ற 4 வயதுடைய மகள் இருக்கிறார். இவரின் தாத்தா வீடு மேற்குமாம்பலம் பகுதியில் இருந்துள்ளது.
அங்கு சிறுமி வந்திருந்த நிலையில், இன்று தனது தாத்தாவுடன் சைதாப்பேட்டை, சாஸ்திரி பிரதான சாலைக்கு வந்துள்ளார். இருவரும் ஸ்கூட்டியில் அங்கு வந்தனர்.
அப்போது, சிறுமியின் தாத்தா வாகனத்தை செயல்பாட்டில் வைத்தபடி, அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார். வாகனத்தில் இருந்த சிறுமி, ஆகசலை முறுக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: சென்னை: 25 வயது இளைஞருக்கு நேர்ந்த சோகம்; நண்பர்களின் வெற்றியை கொண்டாடிய அடுத்த கணமே மரணம்..!
சிறுமி பரிதாப பலி
இதனால் அதிவேகத்தில் இயங்கிய வாகனம், அருகில் இருந்த கடைக்கு அருகே சென்று கீழே விழுந்துள்ளது. இதில் சிறுமியின் மீது வாகனம் விழுந்து, அவரின் தலை மற்றும் நெஞ்சு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், வாகனம் இயங்குவதை பார்த்து மீட்கச் சென்ற சிறுமியின் தாத்தாவும், வாகனத்தின் மேலே விழுந்துள்ளார். இதனால் படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வேலைக்கு ஏன் வரல? கேள்வி கேட்ட மேலாளர் சுத்தியால் அடித்தே கொலை.. சென்னையில் பயங்கரம்.!