நடுரோட்டில் கத்திமுனையில் வழிப்பறி.. ஊசி பிரேமை தட்டிதூக்கிய போலீஸ்.. ஐயோ., அம்மா கதறல்.!
நடுரோட்டில் கத்திமுனையில் வழிப்பறி.. ஊசி பிரேமை தட்டிதூக்கிய போலீஸ்.. ஐயோ., அம்மா கதறல்.!
பொதுமக்களிடம் கத்தியை காண்பித்து மிரட்டி பணம் பறித்த சரித்திர பதிவேடு குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் உள்ள யானைக்கவுனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவர் கடந்த ஜன. 3 ஆம் தேதி காலையில் வியாசர்பாடி - அசோக் பில்லர் சந்திப்பு சாலையில் நடந்துசென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அப்பகுதியை சேர்ந்த பிரேம் குமார் என்ற ஊசி பிரேம் ஆனந்தை வழிமறித்து, கத்தி முனையில் ரூ.500 பணத்தை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக ஆனந்த் P3 வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரேம் குமார் என்ற ஊசி பிரேமை (வயது 21) கைது செய்தனர். அவனிடம் இருந்து 1 கத்தியும் கைப்பற்றப்பட்ட நிலையில், விசாரணையில் பிரேம் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் உறுதியானது. கைது செய்யப்பட்ட பிரேம் குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.