ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி..!
Chief ministar palanisamy taked about the uradanku
இந்தியாவில் அதிக அளவு கொரோனா பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.
முதலில் அந்த பேட்டியில் டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தானாகவே முன் வந்து அரசுக்கு தெரிவிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். மேலும் அப்படி முன் வருபவர்களுக்கு அரசு தரப்பு சார்பில் சிறந்த சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்த கொரோனா நோயின் தாக்கத்தை இன்னும் மக்கள் உணராமல் வெளியில் சுற்றி திரிந்து வருகின்றனர். மேலும் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றி வருகின்றனர் என மனவேதனையுடன் கூறியுள்ளார்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற முடிவை மத்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.