×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சீன அதிபர் சென்னை வருகை! ஸ்தம்பிக்கவிருக்கும் போக்குவரத்து நெரிசல்! மக்களே உஷார்!

china president come to india

Advertisement


இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் நல்லுறவும், வர்த்தக, தொடர்புகளும் இருந்து வருகின்றன. சீனாவுடன் நல்லுறவை கடைப்பிடிப்பதில் பிரதமர் மோடி விரும்புகிறார். அதேபோல சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியாவுடனான உறவை அதிகப்படுத்த விரும்புகிறார். இது தொடர்பாக இரு தலைவர்களும் ஏற்கனவே சந்தித்து பேசி உள்ளனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று சென்னை வருகின்றனர். இதற்காக தனி விமானம் மூலம் இன்று சென்னை வரும் மோடி, விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார்.

இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் சென்னை வருவதையடுத்து பாதுகாப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இருநாட்டு தலைவர்களுக்கான குண்டு துளைக்காத கண்ணாடி அறை, கலைநிகழ்ச்சிகளுக்கான மேடை அமைக்கப்பட்டுள்ளது.

 இருநாட்டு தலைவர்களும் சென்னை வருவதையடுத்து சென்னையில் முக்கிய சாலைகளில் அக்டோபர் இன்று மற்றும் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் இன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் OMR சாலையில் உள்ள பல தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருக்கும். எனினும் எந்த ஒரு தலைவர்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகவே இருக்கும். இந்தநிலையில் இன்று அலுவலகம், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக கிளம்பிச்செல்வது சிறந்ததாக இருக்கும். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#china president #traffic #modi
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story