பரபரப்பு... மர்ம நபர்களால் வெட்டி படுகொலை... தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்.! காவல்துறை வலை வீச்சு!
பரபரப்பு... மர்ம நபர்களால் வெட்டி படுகொலை... தூய்மை இந்தியா திட்டம் மேற்பார்வையாளர்.! காவல்துறை வலை வீச்சு!
தென்காசி மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளர் அவரது அலுவலக உலகத்திலேயே படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலையாளிகளை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கேரளாவின் எல்லையாக அமைந்திருப்பது செங்கோட்டை நகராட்சியாகவும். இங்குள்ள அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார் விஸ்வநாதபுரத்தைச் சார்ந்த முருகன் என்பவரது மகன் ராஜேஷ்(23).
இவர் வழக்கம் போல் புதன்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது இவரை பின்தொடர்ந்து வந்த இரண்டு நபர்கள் இவரை வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கடந்த வரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இருந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய கொலைகாரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.