#Breaking: விண்வெளித்துறையில் தமிழர்கள் சாதிக்க, மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவி., தமிழக அரசின் புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
#Breaking: விண்வெளித்துறையில் தமிழர்கள் சாதிக்க, மாணவர்களுக்கு மிகப்பெரிய உதவி., தமிழக அரசின் புதிய திட்டம்: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.!
சந்திராயன் 3 திட்ட இயக்குனராக பணியாற்றிய விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த முத்துவேல் தமிழக அரசால் பெரிதும் பாராட்டப்பட்டார், கௌரவிக்கப்பட்டார்.
அவரின் வாழ்க்கை பயணம் குறித்த பல விடியோக்கள் சமீபத்தில் வெளியாகின. இதனையடுத்து, தமிழ்நாடு அரசும் அறிவியல் மற்றும் விண்வெளி துறையில் ஆர்வமுள்ள இளைஞரை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதனை தமிழக அரசும் கவனித்த நிலையில், விண்வெளித்துறையில் சாதனை படைத்த தமிழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், பொறியியல் பயின்று வரும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பொருட்டு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, பொறியியல் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும். அறிவியல் ஆர்வத்தையும் ஆளுமை திறமையையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.