கோவை: நள்ளிரவில் பெண்களை துரத்திய போதை இளைஞர்; பணி முடித்து வந்தபோது பகீர்..!
கோவை: நள்ளிரவில் பெண்களை துரத்திய போதை இளைஞர்; பணி முடித்து வந்தபோது பகீர்..!

கோவை மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்தவாறு 2 பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் சம்பவத்தன்று இரவு நேர பணியை முடித்துவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துகொண்டு இருந்தனர்.
அப்போது, இளைஞர் ஒருவர் பெண்களை பின்தொடர்ந்த நிலையில், அதிர்ந்துபோன பெண்கள் இருவரும் உயிரை கையில் பிடித்தபடி ஓட்டமெடுத்து தங்கும்விடுதிக்கு வந்தனர். அங்கு காவலாளியை அழைத்து விபரத்தை கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கோவை: 14 வயது சிறுமி பலாத்காரம் & கருக்கலைப்பு.. ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சி செயல்..! பள்ளிக்கு ஆட்டோவில் மகளை அனுப்பும் பெற்றோரே கவனம்.!
காவலாளி இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், மதுபோதையில் இருந்தார். அதே பகுதியில் செயல்பட்டு வரும் வேறொரு ஹோட்டலில் அவர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனால் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு தொடர்புகொண்டு விபரத்தை கூற, அவர்கள் இளைஞனை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று இளைஞரை அறை ஒன்றில் அடைத்து வைத்தனர். ஆனால், அந்த இளைஞரோ, அறையில் இருந்த துவாரம் ஒன்றை பயன்படுத்தி வெளியே குதித்து தப்பிச் சென்றார்.
தற்போது இந்த விஷயம் தொடர்பான சிசிடிவி கேமிரா பதிவுகள் வெளியாகியுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
வீடியோ நன்றி: பாலிமர் தொலைக்காட்சி
இதையும் படிங்க: செவிலியரை விடுதியில் புகுந்து கத்தியால் குத்திய இளைஞன்; கோவையில் பரபரப்பு சம்பவம்.!