ஓடும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசு ஊழியர் கைது, பகிரங்க கொலைமிரட்டல்.!
ஓடும் அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை : அரசு ஊழியர் கைது, பகிரங்க கொலைமிரட்டல்.!
கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, மலையாண்டி பட்டணத்தில் வசித்து வரும் 19 வயது மாணவி, அங்குள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் சம்பவத்தன்று அரசு பேருந்தில் தனது கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது, மாணவியின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் ரங்கநாதன் (வயது 37), மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தட்டிகேட்கவே, காம கொடூரன் மாணவியை தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளான். இந்த விஷயம் தொடர்பாக மாணவி கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.