பிரியாணி இலைக்கும் பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் போதையில் ரகளை; உண்மை தெரிந்ததும் மன்னிச்சு மொமண்ட்..!
பிரியாணி இலைக்கும் பீடி இலைக்கும் வித்தியாசம் தெரியாமல் போதையில் ரகளை; உண்மை தெரிந்ததும் மன்னிச்சு மொமண்ட்..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஆர் புதூர், காமராஜர் தெரு, கிருஷ்ணா காலனியில் வசித்து வருபவர் புருஷோத்தமன். இவரின் மகன் சத்திய நாராயணன். இவர் சம்பவத்தன்று (அக்.13) அன்று, அங்குள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்குச் சென்று பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளார்.
பிரியாணியில் பீடி இலை?
சம்பவத்தன்று அவர் விடுமுறையில் இருந்ததால், மதுபானம் அருந்திவிட்டு பின் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனிடையே, பிரியாணியில் கிடந்த பிரிஞ்சு இலையை, பீடி இலை என நினைத்தவர், கடைக்கு புறப்பட்டு சென்று தகராறு செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஆசையாக வாங்கி சாப்பிட்ட பீப் பிரியாணியில் கிடந்த பல்லி; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.!
வாக்குவாதம், அவதூறு பேச்சு
இதனால் அங்கு வாக்குவாதம் முற்றி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்திற்கு அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, அவர்களையும் போதையில் இருந்த சத்திய நாராயணன் அவதூறாக பேசி இருக்கிறார். இதனையடுத்து, அவர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்.
மன்னிப்பு கடிதம்
மேற்படி விசாரணையிலும் நாராயணன் பிரியாணி இலையை தவறுதலாக பீடி இலையாக புரிந்துகொண்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினரிடம் தான் செய்த தவறுக்காக மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்ததைத்தொடர்ந்து, அவர் காவல் துறையினரால் எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: சென்னையில் உள்ள எஸ்.எஸ் ஹைதராபாத் பிரியாணி கடைக்கு சீல்; உணவுப்பாதுகாப்புத்துறை அதிரடி.!