கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்தும் தீராத பணத்தாசை.. மனைவியை தாம்பத்தியத்திற்கு ஏங்கித் தவிக்கவைத்த கணவன்.!
கோடிக்கணக்கில் வரதட்சணை கொடுத்தும் தீராத பணத்தாசை.. மனைவியை தாம்பத்தியத்திற்கு ஏங்கித் தவிக்கவைத்த கணவன்.!
வசதிவாய்ப்புள்ள பெண்ணை திருமணம் செய்த இளைஞர், அவரின் பணத்தை வாங்கிக்கொண்டு கூடுதல் வரதட்சணை கேட்டு தாம்பத்திய உறவுக்கு மறுத்த நெஞ்சை உலுக்கும் சோகம் கோவையில் நடந்துள்ளது. இலட்ச இலட்சமாக பணம், நகை, பொருட்கள் கொடுத்தும் கயவனின் பணத்தாசையால் பெண்மணி வெதும்பி விரக்தியான பின் விஷயம் காவல் நிலையத்திற்கு புகாராக சென்ற சோகம் நடந்துள்ளது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆர்.எஸ் புரம் லோகமானியா தெருவில் வசித்து வரும் 34 வயது பெண்மணி, சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் எச்.ஆர் பொறுப்பில் இருக்கிறார். இவர் கோயம்புத்தூர் மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "எனக்கும், நான் வசித்துவரும் பகுதியை சேர்ந்த கௌசிக் கொமரலு ஹர்ஷா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. எனது தந்தை ரூ.75 இலட்சம் மதிப்பிலான தங்க நகை, ரூ.10 இலட்சம் வைர நகை, ரூ.10 இலட்சம் வெள்ளி பொருட்கள், ரூ.10 இலட்சம் வரதட்சணையாக அவருக்கு கொடுத்தார்.
திருமணத்திற்கு பின்னர் எங்களுக்குள் தாம்பத்திய உறவு நடைபெறாமல் இருந்தது. இந்த விஷயம் குறித்து கணவரிடம் கேட்டையில், அவர் கூடுதலாக ரூ.10 இலட்சம் வரதட்சணை கேட்டார். எனது வீட்டில் பேசி அதனையும் நான் பெற்றுக்கொடுத்த நிலையில், கணவர் என்னை கொடுமை செய்ய தொடங்கினார். மேலும், ரூ.25 இலட்சம் வரதட்சணை கேட்டார்.
அதனையும் எனது பெற்றோரிடம் இருந்து வாங்கிக்கொடுத்த நிலையில், அப்பணத்தை வைத்து கணவர் தொழில் தொடங்கியிருந்தார். அதில் நஷ்டம் ஏற்பட, மீண்டும் என்னிடம் பணம் கேட்டார். நான் அதனை கொடுக்க மறுக்கவே, பணம் கொடுக்காவிடில் தாம்பத்தியம் கிடையாது என்று மறுத்துவிட்டார்.
இதனால் நான் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளேன். ஒருகட்டத்தில் எனது பணம் மற்றும் நகையை திரும்பி கேட்டபோது, என்னை கணவர் கொடுமைப்படுத்த தொடங்கினார். அவரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.