×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!

கோவை தொகுதியின் வெற்றிமுகம் அண்ணாமலையா? ராமச்சந்திரனா? ராஜ்குமாரா?.. கருத்துக்கணிப்பு நிலவரம் என்ன?.!

Advertisement


2024 மக்களவை தேர்தலுக்கான முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் மீண்டும் பாஜக ஆதரவு கூட்டணி வெற்றிபெறும் வகையில் இருக்கிறது. பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக பாஜக சார்பில் நரேந்திர மோடி மீண்டும் முன்னிறுத்தப்பட்டு தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் தேசிய அளவில் பல மாநில கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்தப்பட்டு தேர்தல் முன்னெடுக்கப்பட்டது. 

பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு

தற்போது வரை காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், நாளை வெளியாகும் முடிவுகளை பொறுத்து காங்கிரஸ் தரப்பில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தமட்டில் திமுக கூட்டணி 36 தொகுதிகளை கடந்து கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: அண்ணாமலை மீது ஆளுநர் வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுத்தாக கூறப்பட்ட விவகாரம்; ஆளுநர் மளிகை விளக்கம்.!

இதில் அதிமுக கூட்டணி 5 இடங்கள் வரையிலும், பாஜக கூட்டணி 3 இடங்கள் வரையிலும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. மாறுபட்ட களநிலவரம் மற்றும் முந்தைய அதிமுக - பாஜக கூட்டணி பிளவு போன்றவை மீண்டும் திமுக வாய்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது. ஆனால், பாஜக தரப்பு தாங்கள் கூட்டணி 10 இடங்களில் கட்டாயம் வெற்றிபெறும் என கூறுகிறது.

கோவை தொகுதி நிலவரம்

இதனிடையே, கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார், தோல்வி அடைவர் என கருத்துக்கணிப்புகளில் மாறுபட்ட தகவல்கள் நிலவுகிறது. இதனால் கோவை அரசியல் என்பது கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறி இருக்கிறது. 

அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், மாயாவதியின் பிஎஸ்பி கட்சி சார்பில் வேல்முருகன், நா.த.க சார்பில் கலைமணி ஜெகநாதன் ஆகியோர் களமிறங்கி இருக்கின்றனர். இதில் வெற்றிவாய்ப்பு திமுக, அதிமுக, பாஜக பக்கம் இருப்பதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. நாளை முடிவு தெரியவரும்.

இதையும் படிங்க: திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா? அதிமுகவுடன் கரம்கோர்க்கும் காங்கிரஸ்?.. முன்னாள் அமைச்சரின் பரபரப்பு ட்விட்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lokshaba election #annamalai #bjp #dmk #AIADMK
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story