காதலி பெற்றோருடன் சென்றதால், காதலன் தூக்கிட்டு தற்கொலை.. பால் வியாபாரிக்கு காதல் தந்த சோகப்பரிசு.!
காதலி பெற்றோருடன் சென்றதால், காதலன் தூக்கிட்டு தற்கொலை.. பால் வியாபாரிக்கு காதல் தந்த சோகப்பரிசு.!
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து, காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற, பெண்மணி தீடீரென காவல் நிலையத்தில் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்ததால் காதலன் தற்கொலை செய்துகொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவரின் மகன் சரவணகுமார் (வயது 28). இவர் பால் வியாபாரியாக இருந்து வருகிறார். இதே பகுதியில் 21 வயது இளம்பெண் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறவே, இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். நேரில் சந்தித்தும், அலைபேசியில் கொஞ்சி மகிழ்ந்தும் காதல் ஜோடிகள் உற்சாகமாக இருந்து வந்த நிலையில், இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதனையடுத்து, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்யலாம் என்று முடிவெடுத்து, கடந்த 4 ஆம் தேதி காதல் ஜோடி வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக இளம்பெண்ணின் பெற்றோர் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், இருவரையும் தேடி வந்தனர்.
காதல் ஜோடியின் அலைபேசியை ஆய்வு செய்கையில், கொடைக்கானலில் இருப்பது உறுதியானது. கொடைக்கானலுக்கு விரைந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த நிலையில், இளம்பெண் பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.
இளம்பெண்ணின் வாதத்தை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர், அவரின் விருப்பப்படி பெண்ணின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிய சரவணகுமார், சம்பவத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சரவணகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.