கூலிவேலைக்கு செல்லும் தாய்.. மகளை படிப்பில் கவனம் செலுத்த கூறியதால், சிறுமி விபரீதம்.. கண்ணீர் சோகம்.!
கூலிவேலைக்கு செல்லும் தாய்.. மகளை படிப்பில் கவனம் செலுத்த கூறியதால், சிறுமி விபரீதம்.. கண்ணீர் சோகம்.!
கணவரை இழந்து கூலி வேலைக்கு சென்று மகளை கவனித்து வந்த தாய், சிறுமிக்கு அறிவுரை கூறி படிப்பில் கவனம் செலுத்த சொன்னதால் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்தவர் கல்பனா (வயது 34). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கல்பனாவின் கணவர் குமார். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இதனால் கல்பனா கூலி வேலைக்கு சென்று மகளை கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே கல்பனாவின் 17 வயது மகள் அதிகநேரம் செல்போன் உபயோகம் செய்து வந்துள்ளார். இதனைகவனித்த கல்பனா மகளை கண்டித்துள்ளார். மேலும், படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார். இது சிறுமிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது.
நேற்று காலை கல்பனா வழக்கம்போல வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த செட்டிகுளம் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.