உடல்நிலை சரியில்லாததால் சோகம்... புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை..!
உடல்நிலை சரியில்லாததால் சோகம்... புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை..!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலுமிச்சம்பட்டி, உடையார் வீதியில் வசித்து வருபவர் முத்துக்குமார் (வயது 33). இவர் அங்குள்ள மோட்டர் ஒர்க் ஷாப்பில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். முத்துக்குமாருக்கும் - காவியா என்ற 27 வயது பெண்மணிக்கும் கடந்த எட்டு மாதத்திற்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
காவியா தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாகவே முத்துக்குமாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரின் வேலையிலும் சரிவர கவனம் செலுத்த இயலாமல் அவதிப்பட்ட நிலையில், அதனை நினைத்து மன உளைச்சலடைந்து மனைவியிடம் வருத்தி இருக்கிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வாழ்க்கையில் விரட்டி அடைந்த முத்துக்குமார், பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்துவிட, செட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.