இந்து முன்னணி அமைப்பினர் வெறிச்செயல்.. பெரியார் பெயரில் திறக்கப்பட்ட உணவகத்தை சூறையாடிய பயங்கரம்..!
இந்து முன்னணி அமைப்பினர் வெறிச்செயல்.. பெரியார் பெயரில் திறக்கப்பட்ட உணவகத்தை சூறையாடிய பயங்கரம்..!
பெரியார் பெயரில் திறக்கப்பட்ட உணவகத்தை இந்து முன்னணி அமைப்பினர் சூறையாடிய பயங்கரம் கோவையில் நடந்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்ணார்பாளையம் பகுதியில் உணவகம் வைத்திருப்பவர் பிரபாகரன். இவர் ஈ.வே இராமசாமி @ பெரியாரின் தீவிர பற்றாளர் ஆவார். இதனால் தனது உணவாத்திற்கு பெரியார் உணவகம் என்று பெயரிட்டு, பெரியாரின் படத்துடன் பிளக்ஸ் தயாரித்து கடைக்கு முன்பு வைத்துள்ளார்.
இன்று அந்த புதிய உணவகம் திறக்கப்படவிருந்த நிலையில், அதனை எதிர்பார்த்து காத்திருந்த பிரபாகரன் கடை திறப்பு பணிகளை கவனித்து வந்துள்ளார். அந்த சமயத்தில், அங்கு வந்த கும்பல்பெரியார் என்ற பெயரை வைத்து பிரபாகரனோடு வாக்குவாதம் செய்துள்ளது.
ஒருகட்டத்தில் அக்கும்பல் கடையை அடித்து நொறுக்கியுள்ளது. இந்த தாக்குதலில் கடையில் பணியாற்றும் அருண் என்பவர் காயமடைந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக காரமடை காவல் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ரவிபாரதி, சரவணகுமார், பிரபு உட்பட 6 பேரை கைது செய்தனர்.