கோவை தனியார் கல்லூரியில் ராகிங் விவகாரம்; தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு.!
கோவை தனியார் கல்லூரியில் ராகிங் விவகாரம்; தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு.!
கோவை நகரில் செயல்பட்டு வரும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள், அவருக்கு மொட்டையடித்து கொடுமை செய்தனர். இந்த விஷயம் தொடர்பாக புகாரில் 7 மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கலை & அறிவியல் கல்லூரிகள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கல்லூரிகளுக்கும் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கலை & அறிவியல் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் ராகிங் நடைபெறாததை உறுதி செய்ய வேண்டும். ராகிங் தடுப்புக்குழு மூலமாக மாணவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்.
ராகிங்கில் மாணவர்கள் ஈடுபட்டால், அவர்களின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்களை எளிதாக பெறும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட்டு, மாணவர்களுக்கு அதற்கான விழிபுணர்களை ஏற்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.