×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டை அபகரித்து பாலியல் தொழில் நடத்தும் திமுக பிரமுகர்கள்.. பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல் - கோவையில் அதிர்ச்சி.!

வீட்டை அபகரித்து பாலியல் தொழில் நடத்தும் திமுக பிரமுகர்கள்.. பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல் - கோவையில் அதிர்ச்சி.!

Advertisement

கடனுக்கு வந்த ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயற்சித்த திமுக பிரமுகர்கள், சர்ச்சை வீட்டில் பாலியல் தொழில் நடத்துவதாக பெண் புகார் அளித்துள்ளார். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னமநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் திலகவதி. இவருக்கு சொந்தமாக கோவை சாயிபாபா காலனி பகுதியில் ரூ.2.5 கோடி மதிப்பிலான சொத்து உள்ளது. இந்த சொத்தின் பேரில் செல்வபுரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் மூலமாக, கடந்த 2020 ஆம் வருடத்தில் பெருந்துறை ஆடிட்டர் மாணிக்கம் மூலமாக ரூ.11 இலட்சம் அடமான கடன் பெற்றுள்ளார். 

இந்த நிலையில், 3 மாதங்கள் கழித்து வட்டியுடன் கடனை செலுத்த திலகவதி சென்றபோது, ரூ.11 இலட்சத்திற்கு பதில் ரூ.50 இலட்சம் கொடுத்தால் சொத்து பத்திரத்தை தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த திலகவதி, நான் வாங்கிய தொகைக்கு உரிய தொகையை வழங்குகிறேன். எனக்கு சொத்து பத்திரத்தை தாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத சுரேஷ் மற்றும் ஆடிட்டர் மாணிக்கம், திமுக வழக்கறிஞர்கள் மகுடபதி, சிவகுமார் ஆகியோர் சேர்ந்து திலகவதியை மிரட்டி வீட்டினை பூட்டியுள்ளனர். மேலும், ரூ.50 இலட்சம் தொகை தருமாறு மிரட்டவே, "நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள், எங்கள் மீது எங்கு சென்று புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்" என்று அறைகூவல் விடுத்துள்ளனர். திலகவதியின் மீது தாக்குதலும் நடந்துள்ளது.

இதனால் திலகவதி செய்வதறியாது அமைதிகாத்த நிலையில், இரவு வேளைகளில் அவரின் சொத்து பத்திரம் மாட்டியுள்ள வீட்டிற்கு பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலும் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பாக கோவை சாயிபாபா காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திலகவதி புகார் அளித்துள்ளார்.  

இதனிடையே தனது வீட்டில் இரவு நேரஙகளில் பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் தனது வீட்டை மீட்டுத் தருமாறு கோவை சாயிபாபா காலனி காவல் நிலையத்தில் கடந்த 17ஆம் தேதி புகார் அளித்துள்ளார் திலகவதி. புகாரின் பேரில் மனு ரசீது அளித்துள்ள காவல் துறையினர் அதனைத்தொடர்ந்து எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்காததால், உரிய நடவடிக்கை எடுத்து காவல்துறையினர் தனது சொத்தை மீட்டுத் தருமாறு கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று தனது உறவினர்களுடன் வந்து திலகவதி புகார் அளித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Thennamanallur #dmk #tamilnadu #prostitution #police #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story